Posts

திருப்பாவை - ஆண்டாள்

Image
 

அட்சயப்பாத்திரம்

  அட்சயப்பாத்திரம் ·          இறைவனின் படைப்பு இயற்கை   இயற்கையின் அற்புதம் ஐம்பூதங்கள் ஐம்பூதங்களுள்ளும் ஒப்பந்தமில்லா   ஒத்திசைவு – இரகசியம் ஒத்திசைவில் பிளவு - பேரிடர்   பேரிடர் போதனையோ - ஒத்திசைவு   அவசியம்   ·          அவனுள் சக்தியும்   சக்தியுள் அவனும் - அடக்கம்   சிவ சக்தியாய் ... அர்த்தநாரியாய் ...  ஆணும் பெண்ணும்   இறைவன் படைப்பு . ·          சிவனின்றி சக்திக்கு சக்தி இல்லை ; சக்தியின்றி சிவனுக்கு சக்தி இல்லை . ஒருத்திக்கு ஒருவனாய் ... ஒருவனுக்கு ஒருத்தியாய் … கணவன் - மனைவி இருவரும் ஒப்பார் மிக்கார் என்ற பேதமின்றி கற்பினைக் காத்திட ...   சிவசக்தியாய் ஒத்திசைவோடு   ஒத்து இசைத்திடின் ஏராளம் அற்புதங்கள் ... ·   அன்பு ஆதரவு இன்பம் ஈகை உற்சாகம் ஊக்கம் எளிமை ஏற்றம் ஐக்கியம் ஒற்றுமை ஓருணர்வு ஔடதம் இவையாவும் வசப்படும் நல்லதொரு இல்லறவாழ்வால் ... ஆம் ! ·     ...

கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - அனுமப்படலம்

      கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - அனுமப்படலம் ருசியமுகம் மலை மீது அனுமன் இராமனைச் சந்தித்த வரலாற்றைக் கூறுவது அனுமப்படலம்   ருசியமுகம் என்னும் மலை மீது இராமலக்குவனரைக் கண்ட சுக்கிரீவன் , அச்சம் எய்தினார் , சவரி , நெடிது , ஏய மால் வரை எளிதின் ; நொய்தின் ஏறினர் , அதனின் ; நோன்மை சால் கவி அரசு , செய்வது ஓர்கிலன் ; அனையர் தெவ்வர் ஆம் என வெருவி , ' உய்தும் நாம் ' என , விரைவின் ஓடினான் , மலை முழையின் . 1                          சபரி என்பவள் விரிவாக வழிசொல்லி அனுப்பிய காடும் மலையும் கடந்து சென்ற இராமலக்குவர்   பெரிய ருசியமுகம் என்னும் மலைமீது எளிதில் விரைவாக ஏறிச் சென்றனர் . அம்மலையில் இருந்த வலிமை மிக்க குரங்கினத்து அரசனாகி சுக்கிரீவன் வருகின்ற இவர்கள் நம் பகைவராவர் என்று அஞ்சி செய்வது இ ன்னதென்று அறியாதவனாய் ‘ நாம் இப்பொழுது தப்பிப் பிழைப்போம் ' என்று கருதி அம்மலையின் ...