அட்சயப்பாத்திரம்
அட்சயப்பாத்திரம்
இயற்கையின் அற்புதம் ஐம்பூதங்கள்
ஐம்பூதங்களுள்ளும் ஒப்பந்தமில்லா ஒத்திசைவு – இரகசியம்
ஒத்திசைவில் பிளவு - பேரிடர்
பேரிடர் போதனையோ - ஒத்திசைவு அவசியம்
· அவனுள் சக்தியும்
சக்தியுள் அவனும் - அடக்கம்
சிவ சக்தியாய் ... அர்த்தநாரியாய்...
ஆணும் பெண்ணும்
இறைவன் படைப்பு.
· சிவனின்றி சக்திக்கு சக்தி இல்லை;
சக்தியின்றி சிவனுக்கு சக்தி இல்லை.
ஒருத்திக்கு ஒருவனாய்...
ஒருவனுக்கு ஒருத்தியாய்…
கணவன்-மனைவி இருவரும்
ஒப்பார் மிக்கார் என்ற பேதமின்றி
கற்பினைக் காத்திட ...
சிவசக்தியாய் ஒத்திசைவோடு
ஒத்து இசைத்திடின் ஏராளம் அற்புதங்கள் ...
· அன்பு
ஆதரவு
இன்பம்
ஈகை
உற்சாகம்
ஊக்கம்
எளிமை
ஏற்றம்
ஐக்கியம்
ஒற்றுமை
ஓருணர்வு
ஔடதம்
இவையாவும் வசப்படும்
நல்லதொரு இல்லறவாழ்வால்...
ஆம்!
· நல்லதொரு குடும்பம்…
நல்லதொரு கலாச்சாரம்...
நல்லதொரு பாரம்பரியம் ...
கூட்டுறவால் வளம்பெறும் பாரதம்...
பாரதத்தின் அச்சாணி குடும்ப நல்லுறவுகள்…
ஆம்!
· அன்பான குடும்பம்
பந்தம் – பாசமெனும்
ஆருயிர்க்கான உயிர் உறவுக்காற்றைச்
சுரக்கும் அட்சயப் பாத்திரம்
இளைய தலைமுறையினரை நன்நெறிப்படுத்திடும்…
ஜீவஊற்று…
· அட்சயப்பாத்திரம் சுரக்கும் வரை
பாரதத்தின் பழம்பெருமை
தொட்டுத் தொடரும் ...
பாரதத்தின் உன்னதம்
பாரம்பரியமாய் செழித்தோங்குவது திண்ணம்.
````````````````````
Comments
Post a Comment